
12 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை இராணுவத் தளம் மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும், இலங்கை தமிழ் அகதி ஒருவர் ஜேர்மனியின் Düsseldorf உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி தனது 2018 அகதி விண்ணப்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக மாநில சட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அகதிக்கு 15 வயதாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் பொது மக்களும் காயமடைந்தார்களா அல்லது அனைவரும் இலங்கை இராணுவ வீரர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அகதி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக தெரிவிகப்படுகின்றது. இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் எட்டு நாட்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.