சம்பந்தன் சுமந்திரன் உட்பட பலரிடம் விரைவில் விசாரணை

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் தடுப்பு குழுவில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக விரைவில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இந்த விசாரணை வளையத்துக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அடங்குவதாக தெரிவிக்க்ப்படுகிறது.

இதற்கான பரிந்துரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கடந்த 18ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படுகின்றது.

குறித்த பரிந்துரைகளை தற்சமயம் அரச உயர்பீடம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பத்தி விக்கிரமரத்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் சில சட்டத்தரணிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

குழுவின் தலைவராக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.