வடக்கின் கொரோனா நிலவரம்! வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்

வடக்கு மாகாணத்தில் இன்று மாத்திரம் 9 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் வடக்கு மாகாணத்திலிருந்து 679 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது எனவும், அதில் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 4 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.