இலங்கையில் வர்த்தக விமான பயணங்களுக்காக நேற்றைய தினம் விமான நிலையங்கள் திறக்கப்பட்டன.
அதற்கைமய முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டவர்கள் 10 பேர் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.648 என்ற விமானம் ஊடாக நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த சுற்றுலா பயணிகளில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெரியவர்கள் மற்றும் 5 சிறுபிள்ளைகளும் அடங்குவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதற்கு மேலதிகமாக ஜேர்மன் நாட்டவர்கள் ஐவரும் இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகவே அவர்கள் இலங்கை வந்தடைத்துள்ளனர்.
இலங்கை, மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டமை தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக வந்த ஊடகவியலாளர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பஹ்ரேனில் இருந்து இலங்கை பணியாளர் 186 பேர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.