தரம் 5 புலமைப்பரிசில் தேர்வு மதிப்பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வு மதிப்பெண்களின் படி மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது.

தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி அண்மையில் கல்வி அமைச்சின் எதிரில் பெற்றோர் போராட்டத்தை நடத்தினர். இது தொடர்பிலேயே கல்வி அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.