அதிபர் பைடனின் முடிவுக்கு ஐ. நா சபை வரவேற்பு

உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகளின் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பை ஆதரிப்பது மிக முக்கியமானது.

உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் விடயத்தில் சீனா மீது ஆத்திரம் கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக செயற்படுகின்றது என கடுமையாக சாடினார்.

இதனால் உலக சுகாதார அமைப்புக்கு அளித்துவரும் நிதி உதவியை நிறுத்தி உலக சுகாதார அமைப்பிலிருந்தும் வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் – அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.