மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் காலத்தை மேலும் 3மாதங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக திணைக்களத்துக்கு வருகை தருவது குறிப்பிட்ட தொகையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடவடிக்கையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இடம்பெறுகின்றது.

அதனால் வாகன சாரதி அனுமதிப்பத்திம் காலாவதியான சாரதிகள், வாகனங்களை செலுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய அசெளகரியங்களில் இருந்து விடுவிப்பதற்காக இவ்வாறு காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.