திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றி சென்ற “எம்.வி இரோஷன்” ( MV EUROSON ) என்ற கப்பல் இராவணன் கோட்டைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (23.01.2021) இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு மீட்பு பணிகளுக்கு இரு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.