சிறீலங்காவில் மேலும் எட்டு பேர் கோவிட் – 19 தொற்றுக்கு பலி

இலங்கையில் மேலும் எட்டு பேர் கோவிட் – 19 தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 726 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 68ஆயிரத்து 576 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5639 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனாவில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 62ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.