சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய எழுத்தாளர் சாக்திக்க சாத்குமார விடுதலை

நீண்ட காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் சாக்திக்க சாத்குமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் தப்புலா லிவேராவின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு எழுத்தாளர் சாத்குமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கவிதை, சிறுகதை, நாவல், இலக்கணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நூல்களை எழுதியுள்ள விருது வென்ற ஓர் பிரபல எழுத்தாளராக சாத்குமார திகழ்கின்றார்.

கடந்த 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பௌத்த மத துறவற வாழ்க்கையை தழுவிய ஓர் சிறுகதையை முகநூலில் சாத்குமார வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக பௌத்த விஹாரைகளில் பௌத்த துறவிகளுக்கு இடையிலான பாலியல் தொடர்புகள் பற்றி இந்த கதையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகதைக்கு பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதக்குரோத மற்றும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆக்கங்களை வெளியிட்டமைக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் சாத்குமார கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சட்ட மா அதிபரின் உத்தரவிற்கு அமைய சாத்குமார விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.