பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் உள்ளிட்ட தூதுக்குழு பாகிஸ்தான் பிரதமருடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளைய தினம் (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் வீரர்களையும் சந்திக்கவுள்ளார்.