கொழும்பில் தலையில்லா பெண்ணின் சடலம் – தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்

கொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது.

இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது.

இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் உதவுமாறு ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.