கோட்டாக்கு மக்களின் பிரச்சினைகளை தெரியப்படுத்தி தீர்க்க நடவடிக்கை – கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை வரவழைத்து, “கிராமத்துடனான உரையாடல்” நிகழ்ச்சியின் போது மக்கள் எழுப்பிய அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி கோத்தபாய  ராஜபக்சவிடம் தெரியப்படுத்தி தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,

மாகாண அமைச்சுக்களின்  அனைத்து செயலாளர்களையும் வரவழைத்து, திருகோணமலை,கோமரங்கடவெலவில் உள்ள கிராமத்துடன் பேச்சு நிகழ்ச்சியின் போது எழுந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண  மாகாண அமைச்சுக்களின் அனைத்து செயலாளர்களையும் வரவழைத்தார்.

திருகோணமலை வட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறையை தீர்ப்பதற்கான  செயல்முறையை விரைவுபடுத்தவும், ஆசிரியர் உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை சரி செய்யவும் ஆளுநர் மாகாண கல்வி செயலாளருக்கு இதன் போது  அறிவுறுத்தினார்.

 

இப்பகுதியில் ஆசிரியர் விடுதிகளை  நிர்மாணிக்க தேவையான நிதி ஒதுக்கீட்டை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

விவசாய நடவடிக்கைகளுக்கான நிலங்களை மக்களுக்கு விரைவாக வழங்குவதற்காக பிரதேச செயலகங்கள் மூலம் உரிய அதிகாரிகளுக்கு  தேவையான தகவல்களை விரைவாக விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

போருக்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்வதற்கும், மாற்று நிலங்களை வழங்குவதற்கும், காடுகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

மேலும், மாவட்டத்தில் நச்சுத்தன்மையற்ற விவசாய முறையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் மாகாண விவசாய  அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள சுகாதார பிரச்சினைகளை அடையாளம் காணவும், அந்த பிரச்சினைகளை விரைவாக தீர்க்க மத்திய அரசுடன் கலந்தாலோசித்து தீர்வு காணவும் ஆளுநர் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள சுற்றுலா தொடர்பான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஆராயப்பட்ட  சிக்கல்களைத் தீர்க்க ஒரு மாதத்திற்குள் மற்றொரு முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.