இலங்கை உலகக் கிண்ணத்தை சுவீகரித்து 25 ஆண்டு நிறைவு – வெள்ளிப் பதக்கங்களை பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார்?

இலங்கை கிரிக்கெட் அணி 1996 இல் உலகக் கிண்ணம் வென்றதன் வெள்ளி விழாவானது இம்மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்காக உலகக் கிண்ணம் வென்றெடுத்ததை நினைவுபடுத்தும் முகமாக உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியினரால் 2996 வெள்ளிப் பதக்கங்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.

1996 இல் உலகக் கிண்ணம் வென்றெடுத்த இலங்கை வீரர்கள், பயிற்றுவிப்பு மற்றும் வைத்தியர் குழாத்தில் இடம்பெற்றவர்கள் என 17 பேர்களது தனித்தனி உருவம் பொறித்த 2996 வெள்ளிப் பதக்கங்கள் அதிஷ்டசாலி கிரிக்கெட் ரசிகர்களிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

1996 மார்ச் 17 ஆம் திகதியன்று பாகிஸ்தானின் லாஹூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, பலம்பொருந்திய அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி சரித்திரம் படைத்திருந்தது.