மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் தாமதம்

மேல் மாகாண பாடசாலைகள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்தவுடனேயே, மேல் மாகாண பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.