கொழும்பில் இளைஞர் கடத்தல்!ஹிருனிகாவை கைது செய்யுமாறு பிடிவிராந்து பிறப்பிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதாக ஹிருனிகா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றில் ஹிருனிகா வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை ஹிருனிகா உள்ளிட்ட சிலர் கடத்திச் சென்று தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.