பொதுபல சேனாவை தடை செய்வது சரியான முடிவு என அரசாங்கம் கருதவில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்துவது கடினமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பொதுபல சேனா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபல சேனாவை தடை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கத்திற்கு சில மதிப்பீடுகள் உள்ளன எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அரசாங்கம் அதனை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஏனைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்கின்றோம் பாடசாலைப் புத்தகங்களில் தீவிரவாத கொள்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனை அகற்ற வேண்டும். முஸ்லிம் மத்ரசாக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது கட்டுப்பாடுகள் அவசியம், போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.