தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை இட்டு வந்த பொய் குற்றச்சாட்டில் யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
சந்தேகநபர்கள் குறித்த பதிவுகளை இட்டு வந்த யூரியூப் மற்றும் இணையத்தளம் தொடர்பில் சர்வதேச நியமம் மற்றும் சைபர் இணையம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையிலேயே குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த இணையத்தளம் மற்றும் யூரியூப் தளம் என்பன இயங்கி வந்த இடத்தில் இருந்து 5 மடிக் கணனிகள், 5 கணனிகள் என்பன பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கைதானவர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகநபர்கள் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.