ஈழத்தமிழர்களின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மரணம் செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,கவலையும் அடைந்தேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் 01 – 04 – 2021ம் திகதி யாழ்.திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,இவரின் இழப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆயர் அவர்களின் திருவுடல் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து உடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படும். இறுதி சடங்கு கட்டுப்பாட்டுடன் இடம்பெற உள்ளமையினால் மக்கள் அதற்கு முன்னதாக உங்களின் இறுதி அஞ்சலியை மன்னார் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது பேராலயத்தில் செலுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.