இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.
அதன்படி, ஒரே நாளில் 3,14,835 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஆரம்பமானதிலிருந்து இந்தியா ஒரே நாளில் பதிவு செய்த மிக உயர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
மேலும் இந்தியாவில் மகாராஷ்டிராவில் 568 பேரும், டெல்லியில் 249 பேருமாக ஒரே நாளில் 2,104 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்களுடன் 22,91,428 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன், 1,34,54,880 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.