அமெரிக்க கறுப்பு இனத்தவர் ஜோர்ஜ் ஃபிலாய்டை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சோவென் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை அதிகாரிகள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் டெரெக் சோவெனை சோதனை செய்வதுடன், உணவும் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு விநியோகிக்கப்படுகிறது.
மேலும் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இது அவரது பாதுகாப்பிற்காக என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜார்ஜ் ஃபிலாய்டைக் கொலை செய்தமைக்காக முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரியான டெரெக் சோவென் புதன்கிழமை ஒரு நடுவர் மன்றத்தினால் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு ஃபிலாய்டின் மரணம் இன அநீதிக்கு எதிரான உலகளாவிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன் குற்றவாளியான டெரெக் சோவெனுக்கு எதிரான வழக்கு பல ஆண்டுகளாக அமெரிக்க நீதிமன்ற வழக்குகளில் மிகவும் உன்னிப்பாகவும் அவதானிக்கப்பட்டது.
இந் நிலையில் புதன்கிழமை 45 வயதான சோவென் மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை கொலை மற்றும் இரண்டாம் நிலை மனித படுகொலை.
இதற்காக அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.