பிரான்ஸில் இலங்கை பெண்ணொருவர் படுகொலை – பரிஸில் மற்றுமொரு இலங்கையர் கைது

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கொலை குற்றச்சாட்டின் கீழ் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை Pontoise (Val-d’Oise) நகரில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

கடந்த மாத இறுதிப்பகுதியில் Arnouville பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவர் இலங்கையை சேர்ந்தவர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரப்பலைகளுக்கிடையே இருந்து மீட்க்கப்பட்ட, 40 வயதுடைய அப்பெண் கழுத்தில் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பரிஸ் La Chapelle பகுதியில் வசிக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை இவர் படுகொலை செய்திருந்ததாகவும், அதற்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.