கொரோனா தடுப்பூசிகளிற்கு பதில் அரசாங்கம் ரஸ்யாவிடமிருந்து ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளது- சஜித்

கொரோனா தடுப்பூசிகளிற்கு பதில் அரசாங்கம் ரஸ்யாவிடமிருந்து ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் வேகமாக பரவிவரும்நிலையில் மக்களின் துன்பங்களை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டுமக்களிற்கு அவசியமான தடுப்பூசியை பெறுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதுஎனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு பதில் அரசாங்கம் ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்ய முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிலிருந்து இலங்கை இராணுவத்திற்கு நான்கு ஹெலிக்கொப்டர்களையும் சாதனங்களையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான என தெரிவித்துள்ள அவர் பெருந்தொற்று நேரத்தில் தடுப்பூசியை விட ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்வது எவ்வளவு முக்கியமானது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.