சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் பலி- 42,252 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் 7 மாவட்டங்களில் 11,074 குடும்பங்களை சேர்ந்த 42,252 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் குறித்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.