துப்பாக்கி திருடிய விசேட அதிரடிப்படை உறுப்பினர் கைது

இராணுவ வீர ர் ஒருவரின் துப்பாக்கியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரின் ரி56 ரக துப்பாக்கியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தர், ஒன்றாக கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் மிகவும் நுட்பமான முறையில் ஆயுதத்தை திருடி சொந்த ஊரான காலி பத்தேகம பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கியை களவாடிச் சென்று பத்தேகம பிரதேசத்தில் புதைத்து வைத்திருந்த நிலையில் அந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபருடன் மேலும் மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கி களவாடப்பட்டு மறுநாளே துப்பாக்கி மீட்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.