இத்தாலியில் இலங்கையர்கள் குடும்ப தகறாறு மனைவி படுகொலை-கணவர் கைது

இத்தாலியில் வசித்து வரும் இலங்கை பெண்ணொருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரோம் நகரத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் மனைவியை குத்தி கணவன் கொலை செய்துள்ளதாக ரோம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரோம் நகரத்தில் வாழ்ந்த 40 வயதுடைய இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் பேருந்து ஒன்று வரும் வரை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த போது அந்த இடத்திற்கு வந்த பெண்ணின் கணவருடன் வாய்த்தகராறு இடம்பெற்றுள்ளது. இதன் முடிவில் 49 வயதுடைய கணவர் மறைத்து வைத்திருந்த ஆயுதம் ஒன்றில் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் அம்பியுலன்ஸ் ஒன்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த பெண் ஒரு வார காலமாக தனது கணவனை பிரிந்து வேறு ஒரு இடத்தில் வாழ்ந்துள்ளார். மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு கணவர் விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த ஆயுதத்துடன் குறித்த இலங்கையரை அவ்விடத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.