மலேசியாவில் இன்று புதிதாக 9,180 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, தின சரி எண்ணிக்கைகளில் ஆக அதிகமானது. இதற்கு முன்னதாக ஆக அதிகமாக இருந்த தினசரி எண்ணிக்கை 9,353 ஆக இருந்தது.
சிலாங்கூரில் இதுவரை ஆக அதிமான எண்ணிக்கையான 4,400 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூரில் 1,271 கிருமித்தொற்றுகள் பதிவாகின.
அங்கு இன்று புதிதாக 9,353 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று அந்நாட்டில் 9,180 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,000க்கும் அதிகமான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா கூறியதாக பெர்னாமா செய்தித்தளம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவர்களில் எவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை.