நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இருதய கோளாறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.