உலக அரங்கில் தனித்துவமான உறவுடன் பயணிப்போம்- பைடன், கமலாவுக்கு கனடா வாழ்த்து!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள கமலா ஹரிஸ் ஆகியோருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸிற்கு வாழ்த்துக்கள் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனரு ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் இரு நாடுகளும் நெருங்கிய நண்பர்கள், கூட்டாளர்கள் மற்றும் கூட்டாளிகள் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “உலக அரங்கில் தனித்துவமான ஒரு உறவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் இருவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் ஒற்றுமையை உருவாக்குவதற்கும் நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1Share