விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டது. இதற்கான, ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ செப்பர்ட் விண்கலம் மூலம் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. ராகெட்டில் ஜெஃப் பெஸோஸ், அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் பயணப்பட்டனர்.
சுமார் 3,600 கி.மீ வேகத்தில் பறந்த இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்தது.
அப்போது, அனைவரும் விண்ணில் ஜீரோ கிராவிட்டியை அனுபவித்தனர். அப்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஜெஃப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஜெஃப் பெசோஸ் பந்து போன்ற சிறிய பொருளை தூக்கி எறிகிறார். அதனை பிடித்து ஆலிவர் மீண்டும் அவரை நோக்கி எறிகிறார். இப்படி, நான்கு பேரும் தங்களது இருக்கையை விட்டு அங்கும் இங்குமாக மிதந்த படி கிராவிட்டையை உற்சாகமாக அனுபவிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த வாரம் 70 வயதான பிரிட்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலடிக்கின் ‘யூனிட்டி22’ என்ற இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா (34) உள்ளிட்ட 6 போ் அந்த விண்கலத்தில் பயணம் செய்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.