இன்றிரவு வெளியான விசேட வர்த்தமானி

 

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சீனியின் விலை ரூபா 90 எனவும் பொதி செய்யப்படாத சீனியின் விலை கிலோ ரூபா 85 எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன் மொத்தவிலை கிலோ ஒன்றுக்கு ரூபா 80 எனவும் இந்த நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் வெளியிட்ள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.