முஸ்லீம்களை புதைப்பதற்கு தொலைவில் உள்ள தீவொன்றை தேடுகின்றது அரசாங்கம்- அமைச்சர் கெஹெலிய

தொலைவில் உள்ள தீவொன்றில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அவ்வாhறான தீவொன்றை கண்டுபிடிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பான இறுதிமுடிவை சுகாதார அதிகாரிகளே எடுப்பார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நகரங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை புதைப்பது சாத்தியமில்லாவிட்டால் தொலைதூரத்தில் உள்ள தீவொன்றில் அவர்களது உடல்களை புதைக்கும் யோசனை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறவில்லை ஆனால் இதன் அர்த்தம் அரசாங்கம் கொரோனாவால் இறந்த முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதை எதிர்க்கின்றது என்பதல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவறுத்தல்களையே அரசாங்கம் பின்பற்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உடல்களை புதைப்பதை எதிர்க்கவில்லை என அமைச்சரவை தெளிவாக வலியுறுத்தவிரும்புகின்றது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்பவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் இறந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்ற கருத்து தவறானது,எனவும அமைச்சர் தெரிவித்துள்ளார்.