பெல்ஜியத்தில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பெல்ஜியம் 19-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பெல்ஜியத்தில் மேலும் 6,621 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 055 ஆக உள்ளது.