தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், வீட்டிலேயே தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 5 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். குறித்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதில் கலந்துகொள்வதற்கு முன் அவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.