பிரித்தானியாவில் 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ததுடன் 10 குழந்தைகளைக் கொலை செய்த முயன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பெண் தாதியொருவரை அந் நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை செஸ்டர் நகரிலுள்ள வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய லூசி லெட்பியை(Lucy Letby ) கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்படாததால் 2 முறையை லூசி லெட்பி விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.