பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மோமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவரான மோமினுல் ஹக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவா் இழந்துள்ளாா்
கொரோனா தொற்று காரணமாக இம்மாத கடைசியில் நடைபெறவுள்ள டி20 கோப்பை போட்டியிலும் மோமினுல் ஹக் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷ் வீரா்கள் மஷ்ரஃபே மோா்ட்டஸா, அபு ஜாவேத், சயீஃப் ஹசன் ஆகியோா் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது