டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி!

இம் மாதம் 27ஆம்  திகதி தொடங்கவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப்  புறப்பட்டுச் சென்றது.

 

அவுஸ்திரேலியாவில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாட வுள்ள இந்திய அணி, 3 இருபதுக்கு 20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.