வருடாந்த வரவு -செலவுத்திட்ட கருத்தரங்கில் பங்கேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட கப்ரால்

இலங்கையின் பட்டய கணக்காளர் நிறுவனம் (CA ஸ்ரீலங்கா ) ஏற்பாடு செய்துள்ள வருடாந்த வரவு -செலவு கருத்தரங்கு 2020 நவம்பர் 19 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு -செலவு திட்டம் என்பதே இதன் பிரதான கருப்பொருளாகும்.

நாட்டில் கொவிட் -19 அசாதாரண சூழ்நிலையினால் வரவு- செலவு கருத்தரங்கு மெய்நிகர் (ஒன்லைன்) மேடையில் நடைபெறுகிறது. முதல் முறையாக இவ்வாறான ஒன்லைன் கருத்தரங்கு நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பண , மூலதன சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சரான அஜித் நிவார்ட கப்ரால் “வரவு -செலவு திட்டங்களுக்கு பின்னால் சிந்திப்பது” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார். இச்சிறப்பு கருத்தரங்கு நிகழ்வில் திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். அட்டிகலே மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்