8 உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் விவகாரம்! மீண்டும் கேள்வியெழுப்ப தயாராகும் லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டுள்ள 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியான ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்காமை சம்பந்தமான நாளைய தினம் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மீண்டும் கேள்வி எழுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ இந்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு முரணாக இந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற அணியில் இருந்து நீக்கப்படடுள்ளனர்.

இவ்வாறு நீக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களுக்கு மாற்றாக வேறு ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கிரியெல்ல மூன்று வாரங்களுக்கு முன்னர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.