வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையை சேர்ந்த முரளிதரன் அஸ்விகன் என்ற மாணவன் 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.
மாணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
தான் ஒரு விமானியாக வருவதே தன்னுடைய எதிர்கால இலட்சியம் எனவும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றமையால் மகிழ்ச்சி அடைவதாகவும் தன்னுடைய இந்த வெற்றிக்காக உழைத்த பெற்றோர் அதிபர் ஆசிரியர் சக மாணவர்களுக்கு் நன்றி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியிலும் இணையவழி வகுப்புக்களை மேற்கொண்டு தம்மை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் கல்வி கற்றால் எந்தவித சவால்களையும் வெல்ல முடியும் எனவும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலையில் 46 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ந.அமிர்தநாதன் தெரிவித்தார்.