கோட்டா அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்தோருக்கு பாற்சோறு சாப்பிடக்கூட சந்தர்ப்பம் இல்லை

    ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், அவரை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களுக்கு பாற்சோறு சமைத்து சாப்பிட்டு கொண்டாடக்கூட சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

    பாற்சோறு மட்டுமன்றி, அரிசி கூட வாங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

    ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு காலம் பூர்த்தியாகும் முன்னரே கோட்டாபய மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் இன்றைய தினம் ஓர் மோசமான நாளாகவே இருக்கின்றது, தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது, சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் இன்று மிக நீண்ட வரிசை எதற்கு காணப்படுகின்றது தெரியுமா அது நகை அடகு வைக்கும் கடைகளில் காணப்படுகின்றது.

    நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.