சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மகள்

கொழும்பு தாமரை தடாகத்திற்கு எதிரில் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்தின் மீது ஆடம்பர வாகனமொன்று மோதியுள்ளது.

இதனால், வாகன விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.

இந்த யுவதிக்கு வாகனம் ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லை என தெரியவந்துள்ளது.விபத்து ஏற்பட்ட உடன் வாகனத்தின் இலக்க தகடு அகற்றப்பட்டுள்ளது.

முகக்கவசத்தை கூட அணியாது பொலிஸ் அத்தியட்சகரின் மகள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யுவதியின் சகோதரர் கடந்த ஆண்டு பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியதன் காரணமாக பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டர் எனவும் கூறப்பட்டுள்ளது.