பிரித்தானிய பிரதமர் மீண்டும் சுய தனிமைப்படுத்தலில்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்மை மீண்டும் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தனக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதன் காரணமாக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

டுவிட்டரில் இது குறித்து பிரதமர் ஜோன்சன் பதிவொன்றை இட்டுள்ளார்.

“என்னுடன் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எந்த நோய் அறிகுறிகளும் இல்லை.

எனினும் நடைமுறைகளை பின்பற்ற என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய கொரோனா தொற்றாளரை பிரதமர் சந்தித்துள்ளார்.

56 வயதான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 3 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.