Samsung Sri Lanka இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Galaxy S20 FE : ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட முதன்மையான ஸ்மார்ட்ஃபோன்

இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான Samsung, Galaxy S20 series இன் புதிய அங்கத்தவரான தமது நவீன Galaxy S20 Fan Edition கிடைக்கப் பெறுவதாக அறிவித்தது. எமது இளம் இரசிகர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோனினை பயன்படுத்தி ஆக்கபூர்வமான வழிகளில் தங்கள் கருத்துக்களை எவ்வாறு படம்பிடிக்கிறார்கள், வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் எவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதனை மனதில் கொண்டு Galaxy S20 FE வடிவமைக்கப்பட்டுள்ளது.

“Samsung இல் நாம், தொடர்ந்தும் எங்கள் நுகர்வோருடன் பேசுகிறோம். அவர்களுக்கு சிறந்ததை கொண்டு வருவதற்கான வழிகளைத் தேடுகிறோம். Galaxy S20 FE உடன் எங்கள் இரசிகர்களுக்கு அவர்களின் அடுத்த முதன்மைச் சாதனத்தை வடிவமைக்க ஒரு வாய்ப்பினை வழங்கினோம். Galaxy S20 FE என்பது இரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட முதன்மை ஸ்மார்ட் ஃபோன் ஆகும். Galaxy S20 FE ஆனது எமது நுகர்வோர் மிகவும் விரும்பும் அனைத்து புதுமைகளையும் உள்ளடக்கியது. மேலும் இது அணுகக்கூடிய விலையில் கிடைக்கப்பெறுகிறது. இது எமது ஆயிரக்கணக்கான நுகர்வோர், அவர்கள் விரும்பியதைச் செய்ய உதவுவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சியின் சுருக்கமாகும்.´ என Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர், கெவின் சங்சு யூ தெரிவித்தார்.

உன்னதமான வடிவமைப்பு

இது உங்கள் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் விருப்பத்தின் ஒரு சுருக்கமாகும். Galaxy S20 FE ஆனது நான்கு வேறுபட்ட நிறங்களில் உங்கள் தனிப்பட்ட அணுகுமுறை, தோற்றம் மற்றும் ஆளுமை என்பவற்றுக்கு ஏற்றவாறு வருகின்றது. Cloud Red, Cloud Lavender, Cloud Mint மற்றும் Cloud Navy ஆகிய நிறங்களில் கிடைக்கப் பெறுகின்றது. இது உன்னதமான textured haze effect அம்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் கைரேகை அடையாளம் மற்றும் மங்கலான தோற்றத்தினை குறைத்திட முடியும்.

Pro-Grade Triple rear camera – பின் பக்க கமரா

Galaxy S20 FE யின் pro-grade கமரா வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுத்திடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் மகிழ்வினை வெளிப்படுத்திடுங்கள். triple rear camera, சக்தி வாய்ந்த 30X Space Zoom அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது நீங்கள் படம் எடுக்க விரும்பும் பொருளை மிகவும் நெருங்கி எடுக்க அனுமதிக்கிறது. இதன் Single Take அம்சம் 14 வேறுபட்ட விதமான வடிவங்களில் படங்களையும் வீடியோக்களையும் ஒரே கிளிக்கில் எடுத்திட உங்களை அனுமதிக்கிறது. புத்தாக்க படைப்பு வீடியோக்களின் போது நிகழ்நேர அடிப்படையில் முன்பக்க மற்றும் பின்பக்க கமராக்களுக்கிடையே மாறிடவும் உதவுகிறது. Galaxy S20 FE அம்சங்கள் AI multi-frame processing உள்ளடங்கலாக large image sensors இனையும் கொண்டுள்ளது. இதன் Night Mode அம்சத்துடன் குறைந்த வெளிச்சத்தில் தெளிவான படங்களை எடுத்திடலாம்.

கண்கவர் Display

கண்கவர் பார்வை அனுபவத்தினை 6.5-inch FHD+ Infinity-O display உடன் பெற்றுக்கொள்ளுங்கள். இதன் சுமுகமான 120Hz refresh rate மற்றும் 240Hz touch report rate என்பன, fluid scrolling மற்றும் எல்லையற்றை கேமிங் அனுபவத்தினைப் பெற்றுத் தருகிறது.

முதன்மை அடிப்படைகள்

Galaxy S20 FE ஆனது இத்தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் 7nm Exynos 990 processor மற்றும் 4500mAh பட்டரியினைக் கொண்டுள்ளது. இது முழு நாளும் நீடித்து உழைக்கக்கூடியது. அத்தோடு இது wireless power share மற்றும் wireless fast charging மற்றும் 25W Super-Fast charging இற்கும் செயற்படுகிறது. Galaxy S20 FE ஆனது end-to-end hardware மற்றும் software security என்பவற்றை மேம்பட்ட Knox Security யுடன் கொண்டுள்ளது. இது தூசு மற்றும் நீர் உட்புகாதவாறான பாதுகாப்புக்கு IP68 சான்றிதழ் பெற்றது. இது 8GB RAM மற்றும் 128GB உடன் 1TB வரையான microSD card storage இனையும் கொண்டுள்ளது.

Galaxy Fit2

இதன் மூலம் உங்கள் உடற்பயிற்சி மற்றும் தூக்க முறைகளையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மணிக்கட்டில் தெளிவான மாறுபட்ட நிறத்தில் எளிதாக கண்காணிக்க முடியும். இந்த ஸ்டைலான உடற்பயிற்சி ட்ரக்கர் – fitness tracker ஆனது ஒரே ச்சார்ஜில் 21 நாட்கள் வரை தொடர்ந்தும் செயற்படும்.

விலை மற்றும் கிடைக்கக்கூடிய தன்மை

இச்சாதனம் ரூ. 139,999 என்ற விலையில் இலவச Galaxy Fit2 உடன் நாடு முழுவதும் அங்கிகரிக்கப்பட்ட முகவர்களான நிலையத்தின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் Samsung வர்த்தகக் குறி இடப்பட்ட பலகையொன்றின் மூலம் அந்நிலையத்தினை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய John Keells Office Automation இலும் Softlogic Mobile Distribution இலும் பெற்றுக் கொள்ள முடியும். அனுமதி பெற்ற பங்காளர்களான: Softlogic Retail, Singer, Singhagiri மற்றும் Damro விலும், வலையமைப்பு பங்காளியான: Dialog மற்றும் online பங்காளியான: Samsung E-Store, Daraz.lk மற்றும் MySoftlogic.lk ஆகியவற்றிலும் கிடைக்கக் கூடியதாய் இருக்கும். வர்த்தக நாமத்திற்கு மேலும் பெறுமதி சேர்த்திடும் முகமாக Samsung Sri Lanka, TRC யினால் அங்கிகரிக்கப்பட்ட தயாரிப்புக்களை மட்டுமே வழங்குகிறது.

மேலதிக விபரங்களுக்கு, Samsung வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகளை நீட்டிக்கப்பட்ட சேவை நேரங்களான திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை Samsung உடனடி வாடிக்கையாளர் அழைப்பு நிலையத்துக்கு அழைப்பதன் மூலமும் அல்லது Samsung Members இல் வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகளை post செய்வதன் மூலமும் Live Chat மூலமும் அவர்களுக்கான உதவிகளையும் நிகழ் நேர தீர்வுகளையும் 24X7 நேரமும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.