ரணிலுக்கு எதிராக ஜி. எல். பீரிஸ் கடிதம்! கோட்டாவின் கூட்டு பின்னணியில் யார்?

புதிய ஜனாதிபதி பதவிக்கான பாராளுமன்ற தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

இந்த தீர்மானம் தொடர்பில் தெரிந்துக்கொள்ளும் உரிமை எனக்குண்டு என குறிப்பிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆறு கேள்விகளை தொடுத்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

பதவி வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக்குவதற்கும், அவருக்கு ஆதரவு வழங்குவதற்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.

அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை மற்றும் 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) உறுப்புரைகளின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்றத்தின் ஊடாக தேர்தல் எதிர்வரும் புதன் கிழமை (20) பாராளுமன்ற அமர்வை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

பதில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான தீரமானத்தை எந்த அதிகாரத்தின் கீழ் எடுத்தீர்கள்,தீர்மானத்தை எடுப்பதற்பகாக கலந்துக்கொண்டவர்களின் பெயர் என்ன?, கலந்துக்கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்?, கூட்டம் இடம்பெற்ற இடம்,நேரம் மற்றும் திகதி என்ன,? அத்துடன் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டவர்களின் விபரம்?,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அரசியலமைப்பிற்கமைய இத்தீர்மானம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது?. இந்த கேள்விகளுக்கான பதிலை விரைவில் பெற்றுக்கொள்ளும் உரிமை எனக்கு உண்டு.

உங்களின் பதில் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் அமைய வேண்டும் என்பதற்காக எனது கேள்விகளை தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளேன் என ஜி.எல் பீரிஸ்,சாகர காரியவசத்திடம் கடிதம் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

பதவி வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் வாரம் புதன் கிழமை பாராளுமன்றில் இடம்பெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிட தயார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும நேற்று முன்தினம் அறிவித்தார்.

டலஸ் அழபெருமவின் அறிவிப்பை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதி தெரிவின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவு வழங்கும்,டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு கிடையாது என குறிப்பிட்டார்.

சாகர காரியவசத்தின் அறிவிப்பை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து,பிற தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது எந்தளவிற்கு நியாயமானதாக அமையும்.

சாகர காரியவசத்தின் அறிவிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என குறிப்பிட்டார். இதனடிப்படையில் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆறு கேள்விகளுக்கு சாகர காரியவசத்திடம் பதில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.