எரிபொருள் விநியோகம் தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளரின் அறிவிப்பு

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளரினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் எரிபொருள் விநியோக அட்டை பெற்றுக் கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,

1. சங்கானை, பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டைக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

2. 400 மோட்டார் சைக்கிள்கள் (அரச சேவையாளர் உட்பட)

3. 50 முச்சக்கர வண்டி/கார்/வான்

4. இவற்றுக்கான டோக்கன் 18/07/2022 மாலை 6.00 மணியின் பின்னர் வழங்கப்படும்

5. டோக்கன் வழங்கும் போது எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

6. டோக்கன் வழங்கும் போது வரிசையில் காணப்படும் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் அட்டை சரிபார்த்து வழங்கப்படும். அத்துடன் வரிசையில் காணப்படும் வாகன இலக்கம் பதிவுக்கு உட்படுத்தப்படும்.

7. அத்தியாவசிய சேவைக்குரியவர்களுக்கு மட்டும் விசேட டோக்கன் பிரதேச செயலாளரினால் வழங்கப்படும். (அனைத்து திணைக்களத்தை சேர்ந்த அத்தியாவசிய உத்தியோகத்தர்களுக்கு மட்டும் )

8.மொத்தமாக பெட்ரோலுக்கு மூன்று வரிசை பேணப்படும்.

அ. மோட்டார் சைக்கிள்

ஆ. முச்சக்கர வண்டி /கார்/வான்

இ. விசேட வரிசை மோட்டார் சைக்கிளுக்கு 2000/- ரூபாவுக்கும் முச்சக்கர வண்டிக்கு 2500/- ரூபாவுக்கும் கார், வானுக்கு 4000/- ரூபாவுக்கும் பெட்ரோல் வழங்கப்படும்.

9. இறுதியாக 05/07/2022 பின்னர் எரிபொருள் பெற்றுக் கொண்டவர்களுக்கும் வழங்கப்பட மாட்டாது.

10. குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வேறு பிரதேச செயலகங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுவதனால் சங்கானை பிரதேச மக்கள் வரிசையில் 18.07.2022 மாலை 6.00 மணிக்கு முன்னர் தரித்திருப்பதை தவிர்த்துக் கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.