மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கூடாது என உத்தரவிடக்கோரி மேல்
நீதிமன்றில் தாக்கல். செய்த வழக்குகள் வெள்ளிக் கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளை வெள்ளிக் கிழமை விசாரணைக்கு எடுக்குமாறு வழக்காளர் சார்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகளில் கப்டன் பண்டிதரின் தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினில் சட்டததரணி வி.மணிவண்ணனும் மக்களிற்கான நீதி சட்டத்தரணிகள் கூட்டின் ஏற்பாட்டாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இன்னொரு வழக்கிலும் ஆயராகவுள்ளனர்.
மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மேல் நீதிமன்றில் தாக்கல. செய்த வழக்குகள் இரு வழக்குகளில் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் தனியான வழக்காகவும் மேலும் எண்மர் இணைந்து ஒரு வழக்கு என மொத்தம் இரு வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.