வாக்கெடுப்பில் வெற்றி: 8 வது ஜனாதிபதியானார் ரணில்

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டலஸ் அழகப்பெருமே 82 வாக்குகளையும் அனுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 223 பேர் வாக்களித்துள்ளனர். அதில், நான்கு வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாகும்.

இந்த வாக்களிப்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளாது புறக்கணித்தனர்.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கையின் 8வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ளார்.