டலஸ் தலைமையில் புதிய கூட்டணியை ஸ்தாபிக்க ஆலோசனை – திஸ்ஸ விதாரண

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அவதானம் செலுத்திப்பட்டுள்ளது.

கூட்டணியாக சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைவது குறித்தும் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சளவில் மாத்திரமே ஜனநாயகவாதி,அதிகாரத்தில் இல்லாத போது ஜனநாயகம் பற்றி பெருமிதமாக கருத்துரைப்பவர், அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஜனநாயகத்திற்கு எதிராகவே அவர் செயற்படுவார் என்பதற்கு காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொண்ட மிலேட்சத்தனமான தாக்குதல் சான்றாக உள்ளது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே தோற்றம் பெறும்,அதனை தொடர்ந்து மக்களின் போரட்டமும் தீவிரமடையும்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டை தடுக்கும் வகையில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றியை வேண்டும்.சர்வக்கட்சி அரசாங்கம் தோற்றம் பெறாவிடின் மீண்டும் பலவீனமான அரசாங்கமே தோற்றம் பெறும்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கூட்டணியாக சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுகிறது.அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் என்றார்.