வீடு இல்லாமல் தவிக்கும் இலங்கை ஜனாதிபதி! மைத்திரியின் வீட்டை வழங்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பன அழிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனால் ஜனாதிபதியோ பிரதமரோ அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி வீட்டில் இருந்து வெளியேறினார்